

மாற்கு 7:34
“வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சுவிட்டு எப்பத்தா என்றார்.அதற்கு திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்”
நம் தமிழ் வார்த்தையில் ஏப்பம் என்று பொருள்படும் எப்பத்தா அராமைக் மொழியில் திறக்கப்படுவாயாக என்று பொருளாகிறது. ஆம் வரலாறை புரட்டினால் அறியலாம் இந்த அராமைக் மொழி பாலஸ்தீனத்தின் பிரபலமான மொழிகளுள் ஒன்று. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் கூட யூத மக்களின் பேச்சு வழக்கில் கலந்துள்ளது. இந்த அராமைக் மொழி அதனால் தான் இயேசு கூட எப்பத்தா என்று வானத்தை பார்த்து கூறியுள்ளதாக மாற்கு 7:34ல் காணலாம்.
எப்பத்தா என்று கூறவும் அதன்படி கட்டளையாக ஏற்று மனித உறுப்புகள் கீழ்படியவும் இவர் யார்? ஏசாயா 35:4,5ல் கூறுகிறார் ஏசாயா தீக்கத்தரிசி,“தேவன் நீதியை சரிகட்டவும் பதிலளிக்கவும் வருவார். உங்களை இரட்சிப்பார் அப்பொழுது குருடரின் கண்கள் திறக்ககப்பட்டு செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்“ என்று ஆம் இயேசு கிறிஸ்துவே அந்த இரட்சகர் மத்தேயு 1:2ல் அவர் ஜெனிக்கும்போதே தெளிவாக கூறப்பட்டுள்ளது.“இயேசு என்று பேரிடு ஏனென்றால் அவர் ஜனங்களின் பாவத்தை நீக்கி இரட்சிப்பார்“ என்று இவர் பிறப்பு ஒரு அதிசயம். குழந்தை பருவத்திலே சலோமோனின் ஞானத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்றொரு அதிசயம் அவர் வாலிபத்தில் சுவிஷேம் சொல்ல ஆரம்பிக்கும்போதே அவரது அடையாளமும் நாமமும் பல நாடெங்கும் ஏன் உலகெங்கும் கூட இப்போதும் பிரசித்தமாயிருக்கிறது. இன்றும் ஒவ்வொரு நாளும் பிரசித்தமாகிக் கொண்டிருக்கிறது. இயேசுவே மெய்யான இரட்சகர் என்று!
மத்தேயு 7.7ல் இயேசு கூறுகிறார், “கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்“ ஆம் நம்மிடையே
எத்தனை பேர் கேட்கிறோம்?
எத்தனை பேர் தேடுகிறோம்?
எத்தனை பேர் தட்டுகிறோம்?
கேள்வியாக உள்ளது எதனை கேட்க வேண்டும் எப்படி தேடவேண்டும் எங்கு தட்ட வேண்டும் என்று பல தெளிவின்மை நம்மிடையே!
உதாரணம் என்னை போன்ற மாணவ செல்வங்களை எடுத்துக் கொள்வோம். மருத்துவர், தொழில் அதிபர், கலைஞர், ஆசிரியர், விஞ்ஞானி போன்று பல கனவுகள் இருக்கும் ஆனால் எத்தனை மாணவர்கள் துணிந்து தேடுகிறார்கள்.
கேட்கின்றோமா கேள்வி? என்ன? எப்படி? ஏன்? என்று புதையல் தேடுவது போல் வினாவுவகிறோமா புரியாத புதிர்களை? Blue Print போட்டு mark வாங்க படிக்கிறோம், சிந்தித்தோமா? ஏன் என்று நமக்கு வேண்டியது என்ன? அதை அடையும் வழி எது? அதன் தடைகளை முறித்து போராடும் யுக்திகளை அறிந்து திறக்கின்றோமா? நம் பாதையை எல்லாம் வெறும் பேச்சான கேள்வியே!
நாம் ஆசைப்படுவோம் ஆனால் சக மாணவர்களை போன்று பம்மி இருந்து விடுகிறோம். காரணம் – தயக்கம்-அறியாமை-இயலாமை-பிறரின் கேலிக்கு ஆளாகிவிடுவோமோ? வீழ்ந்தால் என்னவாகும் போன்ற பயங்கள். ஆனால் கர்த்தர் சொல்லுகிறார், “யாரும் பூட்டக்கூடாத வாசல்களை நமக்காக எப்பத்தாவாக வைத்திருக்கிறாராம்".
தடைகள் வருவது சாதாரணம் அதை போராடி ஜெயிக்கும் வழியை தேட வேண்டும். தடை என்று சாக்கு சொல்லி இருக்கக்கூடாது. கர்த்தர் சொல்லுகிறார் ஒரு வழி அடையும் ஆனால் எழு வழி எப்பத்தாவாகும் என்று ஆனால் நாம் அந்த அடைப்பட்ட வழியை பார்த்துட்டே திறக்கப்பட்ட மற்ற வழிகளை அறியாமல் இருக்கிறோம். இயேசு கூட மாற்கு 14:36ல் "எல்லாம் உம்மாலே கூடும். இந்த பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும் ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது என்றார்” முடிவில் அவர் வீழ்ந்து போகல இன்றும் மரணத்தை ஜெயித்து உயிருடன் நம்மில் உலாவுகிறார். நேற்றும் இன்றும் நாளை என்றும் உயிருடன் இருப்பவராய் மரணத்தை வென்றார். ஆனால் நாம் அதாவது என்னை போன்ற மாணவர்கள் எஎன்ன செய்கிறார்கள்
10th. 12th, Neet Exam fail ஆ – suicide
First rank Miss ஆகிட்டா, Bike, cellphone வாங்கி தரலயா –Suicide
Teacher அல்லது பெரியவர்கள்/பெற்றோர் எல்லார் முன்னாடியும் திட்டினாங்களா- Suicide
ஏன் இந்த Suicide-? சிந்தித்தீர்களா?
- பொறுமையின்மை/கீழ்படியாமை
- சகிப்புத்தன்மை இல்லை
- அவிசுவாசம் (என்னால் முடியாது போன்ற Negative thought)
- பிடிவாதம் / விட்டுக்கொடுத்தல் இல்லை
- இச்சை
தூஷண வீண் வார்த்தைகள் அலப்புதல் போன்றவையே! வேண்டாம் இந்த குணங்கள் மாற்கு 7:21.22ல் கூறப்பட்டுள்ளது போல் இவைகள் எல்லாம் நம் இருதயத்தை தீட்டுப்படுத்தும். எபிரேயர் 1:1 போல் என் வாழ்க்கையில் அடைப்பட்ட வாசல் எப்பத்தா ஆகும் என்று விசுவாசியுங்கள்.
இங்கு கூட கொன்னைவாயும் செவிடனுமாய் இருந்த ஒருவனை மாற்கு 7:32ல் ஜனங்கள் அனைவரும் சேர்ந்து அவன் மீது கையை வைக்கும்படி இயேசுவிடம் வேண்டினார்கள். (இங்கு ஜனங்களின் விசுவாசம் தெரிகிறது)
இயேசு அவனை ஜனங்களிடமிருந்து தனியே அழைத்துக்கொண்டு போனார் அவனும் இயேசு சுகமளிப்பார் என்று விசுவாசித்ததினால் அவர் பின் சென்றான்.
தன் விரல்களை அவன் காதுகளில் வைத்து பின் உமிழ்ந்து அவன் நாவை தொட்டார். அடைப்பட்ட காதையும் கட்டப்பட்ட வாயையும் திறக்க வேண்டும் என்று வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டு “எப்பத்தா" என்றார் அதாவது திறக்ககப்படுவாயாக என்று கூறினார். உடனே அவன் அடைப்பட்ட செவிகள் திறந்து கட்டப்பட்ட நாவு கட்டு அவிழ்ந்து செவ்வையாய் பேசினான் என்று மாற்கு 7:35ல் வாசிக்கலாம்.
2020ல் கூட
எப்பத்தா திறக்கப்படுவதாக
வானம் திறந்து
தெய்வம் பேசனும்
வாசல்கள் எல்லாம்
இன்றே திறக்கனும்
- என்ற பாடலில் அடைப்பட்டது எப்பத்தாவாயிற்று என்றும் ருசித்தது ஆபிரகாம் சாராள் அன்னாள் எலியா தாவீது போன்று பலர் என்று கூறுகிறார் Rev. Alwin Thomas.
ஆம் இன்றும் பலரது வாழ்வின் தடைகள் மாறி எப்பத்தாவாகிறது. சமீபத்தில் Kanyakumari-ல் கூட impossible னு டாக்டரால் முத்திரை வைத்து 10 வருஷம் பிள்ளை செல்வம் இல்லாது இருந்தவர்களின் தடைகள் எப்பத்தாவாயிற்று என்று கடந்த செப்டம்பர் மாதத்தில் சாட்சி சொல்ல கேட்டோம். ஆகவே தடைகள் எப்பத்தாவாக நிச்சயமாக மாறும். விசுவாசியுங்கள்!
அடைப்பட்ட வாசல் எப்பத்தாவாகும் என்று! மறுபடியும் மத்தேயு 7:7ன் படி நம் இயேசுவிடம் கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்று கூறுகிறேன்.
Comments
Post a Comment