

I சாமு 3:10
"அப்பொழுது கர்த்தர் வந்து நின்று முன்போல சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார் அதற்கு சாமுவேல் சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்றான்”
யார் இந்த சாமுவேல்?
அன்னாள், தன் மலடி என்ற பட்டத்தை நீக்க தேவனிடம் பொருத்தனை செய்து பெற்று கொண்ட பிள்ளை தேவனுக்கென்று ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட குழந்தை தான் இச்சாமுவேல்!
“இதோ இருக்கிறேன்”என்றதும்;
“என் மகனே நான் கூப்பிடவில்லை திரும்பி போய் படுத்துக்கொள்"என்று கூற தன் இடத்தில் சென்று படுத்துக் கொள்கிறான்.
இப்படி மூன்று முறை கூப்பிட, ஏலி அறிகிறார் கர்த்தர் பிள்ளையாண்டானை கூப்பிடுகிறார் என்று!
“கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்”என்று சொல். அதுபோலவே, சாமுவேலும் கர்த்தர் மறுபடியும் கூப்பிட
“சொல்லும் அடியேன் கேட்கிறேன்”என்றான்.
சாமுவேல் இறைசத்தம் கேட்டு இறைசித்தம் செய்ய தன்னை அர்பணிக்ககிறான் - தீர்க்கத்தரிசனம் வெளிப்படுகிறது - இறை இரகசியமும் அறிகிறான்.
I சாமு 3:19ல் சாமுவேல் வளர்ந்தான். கர்த்தர் அவன் கூடவே இருந்தார் என்று கூறப்படுகிறது. கர்த்தருக்கென்று ஊழியம் செய்து அந்நாட்களில் எழுப்புதலின் கருவியாக திகழ்ந்தவர். எங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்ற இஸ்ரவேலரின் விண்ணப்பம் படி இறைசித்தத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை ராஜாவக அபிஷேகித்தவர். பெரிய தீர்க்கத்தரிசி என்று கீர்த்தி பெற்றவர் இந்த சாமுவேல்.
ஏன் சாமுவேல்?
யோசித்து பார்த்தீர்களானால் தெரியும். அது சாமுவேலின்
- கீழ்படிதல்,
- பொறுமை மற்றும்
- உத்தம கபடற்ற இருதயமும் தான்.
அப்படியென்றால்,
ஏன் ஆலய போதகராக இருந்தும் ஏலி இல்லை?
ஏன் அவர் வம்சம் இல்லை?
I சாமு 2:30-36ன் படி இதற்கு காரணம் தேவ சத்தம் கேட்டு அக்கினியாய் (பரிசுத்தமாய்) இருக்க வேண்டிய ஆலயம் சாம்பல் பூத்து கிடக்கிறது.
என்ன பரிதாபம்?
ஆத்துமாக்களை பாவத்திலிருந்து தூக்கிவிடவேண்டும். ஆனால் ஏலியின் பிள்ளைகளோ அவர்களோடு சேர்ந்து பாவம் செய்கிறார்கள். அவர்களை தண்டித்து வளர்க்க ஏலிக்கும் மனமில்லை. பிள்ளையின் பாசம் அவரை நீதிக்கு தூரமாக்குகிறது. தேவ சத்தம் கேட்கவும் தேவ சித்தம் செய்யவும் சுத்தமுள்ள இருதயம் அவர்களிடத்தில் இல்லை.
ஆம் மத்தேயு 5:8ல் கூறுகிறது, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்" என்று!
நீயும் சுத்தமுள்ள இருதயத்தோடு இறை சத்தம் கேட்டு இறை சித்தம் செய்ய அர்பணித்தால் நீயே இக்காலத்து சாமுவேல்! என்று கூறுகிறேன்.
Comments
Post a Comment