Image
                            சுற்றுசூழல் என்பது நம்மை சுற்றி சூழ்ந்துள்ள இயற்கை அதாவது காற்று, நீர், மண், மரங்கள், மற்றும் எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கியது. இந்த இயற்கை  வளங்கள் இல்லாமல் உயிர் வாழ மனிதனால் முடியாது. ஆனால் இன்று நாம் என்ன செய்கின்றோம்.                 மாசு ஏற்படுத்துகிறோம்.                 மரங்களை வெட்டுகிறோம்.                 நீரில் கழிவுகளை கலக்குகின்றோம்.                 எரிச்சலூட்டும் ஒலியை எழுப்புகிறோம். இப்படி மாசு மாசு மாசு என்கிறோமே! ஆமா இந்த மாசு வர காரணம் தான் என்ன? என்று சிந்தித்து பார்த்தீர்களா? சிந்தியுங்கள்! நில மாசு, நீர் மாசு, ஒலி மாசு, அறிவியல் மாசு,... என்று அடுக்கி கொண்டே போகலாம். நிலத்தில் கலக்கும் ஆலை கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருளும் நிலத்தின் தன...

இறையரசுக்குரியோர் கீழ்ப்படிவோர்

பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்படியுங்கள் இது நியாயம். எபேசியர் 6 :1

இப்பூமியில் கண்ணார கண்டும் நன்கு அறிந்தும் இணைந்து வாழ்ந்தும், நாம் ருசித்த நம் பெற்றோருக்கும் அதாவது இறைவன் அருளால் நம் உயிருக்கு உயிர் கொடுத்த நம் தாய் தகப்பனுக்கு கீழ்படிய வேண்டுமாம். அதே போல் சிலர் உள்ளத்தில் உணர்ந்தும் காட்சி அளிக்கப்பட்டு கண்டும் காணாமல் விசுவாசிக்கும் நம் கர்த்தருக்கும் அதாவது எல்லா படைப்புகளுக்கும் உயிர் கொடுத்த தேவனுக்கும் கீழ்படிய வேண்டுமாம். இது நியாயம் தானே!

இந்த AI உலகில் அதாவது Artificial Intelligence - 2020+ உலகில் மனிதர்களால் படைக்கப்பட்ட ROBOT கூட கொடுக்கப்பட்ட Instruction ஐ தான் கடைபிடித்து Supervised, Unsupervised predictable pattern ல மனிதனை மிஞ்சி செயல்படுகிறது. இப்படியிருக்க நம்மை படைத்த பெற்றோருக்கும் கர்த்தருக்கும் கீழ்படிவது நியாயம் தான்.

இப்படி கீழ்படிந்த நபராக நான் தெரிந்து கொண்ட நபர் ஆதியாகமம் புஸ்தககத்தில் 22-ம் அதிகாரத்தில் வரும் ஆபிரகாமையும் அவர் மகன் ஈசாக்கையுமே!

கேளுங்கள்?

ஏன் இந்த ஆபிரகாமும்-ஈசாக்கும்?

 அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்?

நம்மை விட தனித்தவர்களா?

இறையரசுக்கு சென்றவர்களா?

அதற்கு சாட்சி கூற்று உண்டோ?

இவர்கள் சிறப்பு என்ன? கேளுங்கள்!

அத்தனைக்கும் அடிதளம் இவர்கள் கீழ்படிதலே!

ஒருநாள் தேவன் ஆபிரகாமிடம் தன் மகனாகிய ஈசாக்கை பலியிடு என்று! சொன்னதும் மறுமொழி சொல்லாது பலியிட ஆயுத்தமானார்.

அதுமட்டுமல்ல, ஆதியாகமம் 22:7ல் மகன் கேட்கிறான், “ என் தகப்பனே! இதோ நெருப்பும் கட்டையும் இருக்கிறது. தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே? இப்படி கேட்கும்போது ஒரு தகப்பன் மனம் எப்படி நொறுங்கும்!!!

நாம் இந்நிலையில் என்ன செய்வோம்?

ஆனால் ஆதியாகமம் 22:8ல் ஆபிரகாம் மறுமொழியாக கூறுகிறார்.”என் மகனே தேவன் தமக்கு தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார்”.

இப்படி கூறிவிட்டு உடனே ஆபிரகாம் பலிபீடம் செய்ய ஆரம்பித்தார். அதன்மேல் தன் மகன் ஈசாக்கையும் கட்டி கிடத்தினார். அங்கு அந்நேரம் வெளிப்பட்டது ஆபிரகாமின் கீழ்படிதல்!

அவர் தேவன் வார்த்தைக்கு எதிராக ஒன்றும் சொல்லவில்லை, தவறாக திட்டம் எதுவும் தீட்டவில்லை. இத்தனைக்கும் தன் நூறுவயதில் கிடைத்த மகன் தேவனால் வாக்குதத்தம் பண்ணி காத்திருந்து பெற்றுக் கொண்ட மகன் தான் இந்த ஈசாக்கு.

தேவன் பலியிட சொல்லும்போது நீர் பலியிடவா இக்குழந்தையை வாக்குதத்தம் பண்ணி கொடுத்தீர் என்று கேட்டிருக்கலாம். பலியிட சென்ற போது கூட தேவன் மனமிறங்குவார் என்று விண்ணப்பம் செய்து நாட்களை தாமதித்திருக்கலாம். பலியிடம் ஆயுத்தம் ஆன பின்பு கூட மகனிடம் கூறி தப்பிக்க விட்டிருக்கலாம். ஆனால் ஆபிரகாம் அப்படி செய்யவில்லை.

ஏன் இந்த கீழ்படிதல்?

"தேவன் மேல் வைத்த பயபக்தி” இது. ஆதியாகமம் 22:10ல் ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்கு தன் கையை நீட்டி கத்தியை எடுத்தான். அதனை ஈசாக்கும் தடுக்கல கோபப்பட்டு விவாதிக்கல மறுவார்த்தை ஒன்றும் கூறாது அமைதியாக கட்டப்பட்டு பலிபீடத்தில் கிடந்தான். 

இங்கு வெளிப்பட்டது மகனின் கீழ்படிதல்!
நடைமுறையில் கடந்த மாதம் டிசம்பர் 2024ல் தனக்கு சொத்து தரவில்லை என்று தன் தாய், தகப்பன், உடன் சகோதரியை வெட்டி கொலை.  

எண்ணிலடங்கா சம்பவம் நடக்கிறது இவ்வுலகில்!

எங்கே இந்த கீழ்படிதல்?

“சுயநலம்”, “தான்”, “எனக்கு” என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. இதனால் அவனும் அழிந்து அவன் வம்சமுமே வேரோடு அழிகிறது. முன் மாதிரியாய் வாழ வேண்டிய பெரியோர் முதல் பாதம் பதிக்க பழகும் சிறுவர் வரை கீழ்படிதல் இல்லை கடிந்துக் கொள்ளுதலை தாங்கும் மனமில்லை, சிந்திக்கும் பொறுமை திறன் இல்லை எங்கே போயிற்று Missionary களின் பாதசுவடுகள்? எங்கே போயிற்று இந்த சரித்திரத்தின் வம்ச பாதசுவடுகள்! மாறாக ஏன்? எதற்கு? என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது.

அன்று கீழ்படிதலின் மூலம் ஆபிரகாம் சுதந்தரித்தான் ஆசீர்வாதத்தை ஆதியாகமம் 22:16 லிருந்து 18 ல் சொல்லப்பட்டது போல் அவருக்கு மட்டுமல்ல அவர் சந்ததிக்கும் கூட ஆசீர்வாதம் தான்.

நற்செய்தி நூல் மத்தேயுவில் எளியவரான லாசருவை விண்ணில் தன் மடியில் இளைப்பாற செய்தார் இந்த ஆபிரகாம் என்றும், சிறுவர்களை வழிகாட்ட “ஆபிரகாம் தாத்தாவுக்கு அநேக பிள்ளைககள் உண்டு அதில் நீயும் உண்டு நானும் உண்டு தேவனை துதித்திடுவோம்" என்று இறையரசுக்கு செல்ல ஊக்குவித்து வருவதை தேவாலயத்தில் இன்றும் காணலாம்.இன்றைக்கும் அவர் புகழ்ச்சி ஓங்கி கீழ்படிதலின் தகப்பன் ஆபிரகாம் என்றுரைப்பதை கேட்க முடியும்.

மோசே கர்த்தருக்கு கீழ்படிந்ததினால் யாத்திராகமம் 20ல் சொல்லப்பட்டது போல் கிடைத்தது நியாயபிரமாணம். அது வாழும் வாழ்க்கையின் வழிகாட்டியாய் இன்றும் திகழ்கிறது.

யோசுவா 11:15ல் யோசுவா கர்த்தருக்கும் மோசேக்கும் கீழ்படிந்ததினால் பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்தை இஸ்ரவேல் தேசமாக சொந்தமாக்கினார்.

I சாமுவேல் 3:10ல் சாமுவேல் ஏலிக்கும் கர்த்தருக்கும் கீழ்படிந்ததினால் பெரிய தீர்க்கத்தரிசியாக திகழ்ந்தார். இதைபோன்று பல உயர்ந்தோர்களை அடுக்கி கொண்டு போகலாம். இப்படி இறையரசுக்குரியவர்கள் கீழ்படிதலில் நிலைத்து நிற்கும் குணத்தை உடையவர்கள் என்பதை காணலாம்.

நம் நசரனாகிய இயேசு கிறிஸ்து கூட பிலிப்பியர் 2:6 லிருந்து 11ன் படி கீழ்படிதலினால் தன்னை மரணபரியந்தம் வரை தாழ்த்தினார் என்றும் எல்லாவற்றிலும் உயர்ந்த நாமத்தை இறையரசில் பெற்றார் என்று ஜீவ புஸ்தகமான சத்திய வேதாகமம் உரைக்கிறது. ஆதலால் கீழ்படிந்தோர் மேல்படி  அடைவதில் எந்தவொரு மாறுதலும் இல்லை என்று கூறியும். இன்னும் ஒருமுறை, பிள்ளைகளே பெற்றோருக்கு கீழ்படியுங்கள் "உங்கள் வாழ்நாள் பூமியில் பெருகும்" என்றும்; கர்த்தருக்கு கீழ்படியுங்கள் உன் "சந்ததியே பூமியில் ஆசிர்வதிக்கப்படும்" என்றும்,

கீழ்படியுங்கள்!

கீழ்படியுங்கள்!

கீழ்படியுங்கள்!

விண்ணில் நம் இறையரசை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள் என உரைத்து கூறுகிறேன்.

Comments

Popular posts from this blog